ADVERTISEMENT

மருத்துவர் எழிலன் ஒருங்கிணைப்பில் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய நிகழ்வு..! 

10:07 AM Jun 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதனின் ஒருங்கிணைப்பில், 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா சென்னை இலயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகத்தின் பலனாக கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கரோனா கட்டுப்பாட்டு பணிகளை சீரிய முறையில் முன்னெடுத்ததுடன், சட்டமன்ற உறுப்பினர்களையும் தொகுதியில் உரிய பணிகளை செய்ய உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவின்படி, ஆயிரம்விளக்கு தொகுதியில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன்.

சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற நாளிலேயே உரிய திட்டங்களைத் தயார்செய்து, சென்னை பெருநகர மாநகராட்சி, இலயோலா கல்லூரி நிர்வாகம், இலயோலா முன்னாள் மாணவர் சங்கம், மேக்ஸ் மருத்துவ அறக்கட்டளை ஆகியோரை ஒருங்கிணைத்து, கரோனா சிகிச்சை மையத்தை (Covid Care Center) தொடங்கினார். 17/05/2021 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கிவைத்த கரோனா சிகிச்சை மையம் 30 நாட்கள் செயல்பட்டு, ஆயிரம் விளக்கு தொகுதியில் நோய்ப் பரவல் சங்கிலியை உடைப்பதில் பெரும்பங்கு வகித்தது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்களைத் தொடர் நிகழ்வுகள் மூலம் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்ற முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், 16/06/2021 அன்று செம்மொழி பூங்காவில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து, தொகுதிக்குள் செல்லும் இடங்களில் எல்லாம் தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டுவருகிறார்.

29/05/2021 அன்று தொடங்கி இதுவரையில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும், பல்வேறு பகுதிகளில் வட்ட, கழகச் செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் 33க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களை நடத்தி, 10,000 த்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைச் செய்துள்ளார். 24/05/2021 அன்று ரிப்பன் மாளிகையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 22 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினரும் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


அதன் அடிப்படையில், Action Aid, Give India, இலயோலா கல்லூரி ஆகியவை மூலம் சுமார் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகளைத் தமிழ்நாடு அரசுக்கும், சென்னை பெருநகர மாநகராட்சிக்கும், பல்வேறு மருத்துவமனைகளுக்கும் வழங்கும் நிகழ்ச்சி 17/06/2021 அன்று மாலை 6 மணியளவில், இலயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலயோலா கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை தாமஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Action Aid தென்னிந்திய பொறுப்பாளர் திருமதி எஸ்தர் அவ்வமைப்பின் பணிகள் குறித்து விளக்கினார். மேலும், மருத்துவர் எழிலன் நாகநாதனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கியதைக் குறிப்பிட்டார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கரோனா தடுப்பில் அரசின் பணிகளையும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறநிலையத்துறை சீர்திருத்த பணிகளையும், கோவிட் தடுப்பு பணிகளில் அவரது பங்களிப்பையும், திமுக இளைஞரணிச் செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொகுதிக்குள் ஆற்றிவரும் அயராத பணிகள் குறித்தும், எந்நேரமும் தொகுதிக்குள் செயல்பட்டுவரும் அவருடைய மக்கள் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.


இலயோலா கல்லூரியின் மக்கள் தொடர்பாளர் தாமஸ், மருத்துவர் எழிலன் நாகநாதனின் சீரிய கோவிட் தடுப்பு பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் அரசின் பணிகள் குறித்தும், முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகம் குறித்தும் உரை நிகழ்த்தினர். இலயோலா கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், கல்லூரி மாணவி சௌந்தர்யா நன்றி கூறினார்.

நிகழ்வில் திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே. சிற்றரசு, ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி செயலாளர் மா.பா. அன்புதுரை, மேற்கு பகுதி திமுக செயலாளர் அகஸ்டின்பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ். ராஜ், வட்ட திமுக செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டல அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT