''Even up to this moment, there is no hope'' - Actress Vadivukkarasi bursts into tears

Advertisment

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே 'ஓம் சரவண பவ' யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.

இந்நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமாகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் முதல் திரைப்படமான 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் அவருக்கு ஜோடிக்காக நடித்த நடிகை வடிவுக்கரசி அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அழுதபடியே பேட்டியளித்த அவர், ''நான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேசுவேன் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஒழுக்கமான மனிதர். கிட்டத்தட்ட 46 வருடம், முதல் படத்தில் கதாநாயகியாக நடித்ததில் இருந்துபத்து நாளைக்கு முன்ன பேசும் வரையுமே என்கிட்ட எல்லாமே சொல்லுவார்.ரொம்ப டிசிப்ளினானவர். எதையுமே பிளானிங்கோடுதான் பண்ணுவார். ஆனால் இது மட்டும் எப்படி அவருக்கு தெரியாமல் போச்சுன்னு தெரியல.

Advertisment

nn

மத்தவங்களுக்கெல்லாம் சொல்லுவாரு, எல்லாருக்குமே சொல்லுவாரு. அப்படிப்பட்ட அவருக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சுக்காம போனாரு என்பதுதான் காலையிலிருந்து எனக்கு மனசு ஆறல. எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் கூட நம்பிக்கையே இல்லை. நான் எங்கேயுமே மைக் முன்னாடியெல்லாம் பேசவே மாட்டேன். இழந்தவர்களுக்கு தான் அவங்களோட வலி வேதனை தெரியும். ஆனால் இதுரொம்ப வலிக்குது. ரொம்ப வேதனையா இருக்கு. பத்து நாள் முன்னாடி பேசும்போது கூட இன்விடேஷனோட வருவேன் என்றார். நான் கிண்டலுக்காக 'பரவால்ல சார் 75 வயசுல இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறீங்க' என சொன்னேன். ரொம்ப ஒழுக்கமானவர். போன பிறந்தநாளில் கூட என்னை வந்து வாழ்த்தினார். ஜூலை 6ஆம் தேதியை நான் மறந்தால் கூட அவர் மறக்கவே மாட்டார். முதல் ஃபோன் அவரிடம் இருந்து தான் வரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஃபர்ஸ்ட் டே எப்படி பழகினாரோ அதேபோலத்தான் இருப்பார்.

நாங்கள் லாஸ்ட் மந்த் இரண்டு பேரும் திருச்சியில் ஒரு சித்தா ஹாஸ்பிடல் திறந்து வைக்க போனோம்.அப்போகூட கேட்டேன் சார் ஞாபகம் இருக்கா? திருச்சி என்று சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும் சொல்லுங்க. உங்களுக்குத்தான் எல்லாமே ஞாபகம் இருக்குமே என கேட்டேன். 'கன்னிப்பருவத்திலே' இங்கதான் சார் நாம நடிச்சோம்என்று சொன்னேன்'' என கண்ணீர் விட்டு அழுதார்.