ADVERTISEMENT

“ரூபி மனோகரன் செய்தாலும் அதற்கு பின் செல்வப் பெருந்தகை தான் உள்ளார்” - ரஞ்சன் குமார்

03:52 PM Nov 24, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார், மோதலுக்குப் பின்னால் செல்வப் பெருந்தகை இருப்பதாகக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சன் குமார், “காங்கிரஸ் தொண்டர்களின் மோதலுக்குப் பின் செல்வப் பெருந்தகை உள்ளார். செல்வப் பெருந்தகை கடந்த காலங்களில் 6 முதல் 7 கட்சிகளில் இருந்தவர். அனைத்துக் கட்சிகளிலும் கட்சிகளைப் பிளவுபடுத்தும் செயல்களைத்தான் செய்துள்ளார். கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சி கட்டுக்கோப்பாக இல்லை என்பதைப் பிரதிபலிக்கவே இந்த செயல் செய்யப்பட்டது என்பதை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

ரூபி மனோகரன் இதைச் செய்தார் என்றாலும் இதன் பின் செல்வப் பெருந்தகை தான் உள்ளார் என்பதை நான் அறிவேன். காங்கிரஸ் கட்சிக்காரர்களும் நாட்பட அறிந்து கொண்டுள்ளனர்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT