Advertisment

“எனக்கு பாரத ரத்னா விருதே கொடுத்தாலும் வேண்டாம் என்பேன்” - ராமதாஸ் பேச்சு

publive-image

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பெரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்தாலும், வேறு எந்த விருது கொடுத்தாலும் நான் அதை மறுப்பேன். ஏனென்றால் அதைவிட சிறந்த விருது உங்கள் மனதில் நான் வாழ்கின்றேன். நீங்கள் எங்கள் காவல் தெய்வம் என்று சொல்கிறார்கள்; மனிதநேய பண்பாளர் என்று சொல்கிறார்கள். இதைவிட சிறந்த விருது வேறு என்ன வேண்டும்.

Advertisment

பாரத ரத்னா விருதை நான் குறை சொல்லவில்லை. அந்த விருதை நல்லவர்களுக்கு; உயர்ந்தவர்களுக்கு; மேன்மை மிக்கவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் நான் மக்கள் மனங்களில் வாழ்கின்றேன். ஒவ்வொரு மனங்களிலும் வாழ்கின்றேன். பொங்கலன்று வன்னியர் சங்க தலைவர் அன்புமணி என்பவர் தொலைபேசியில் என்னோடு பேசினார். 'ஐயா நீங்க நல்லா இருக்கணும். எங்களை பற்றி கவலை இல்லை. நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்' என வாழ்த்து சொன்னார். இதை விட வேறு என்ன வாழ்த்து எனக்கு வேண்டும்.

லண்டனில் இருந்து ராஜ்குமார் - அனிதா என்ற தம்பதியினர் அரியலூரை சேர்ந்தவர்கள் நேராக என் தோட்டத்திற்கு வந்து என் காலில் விழுந்து வணங்கி, 'நீங்கள் பெற்றுக் கொடுத்தஎம்பிசியால் நாங்கள் இன்டெர்நேஷனல் கம்பெனிகளில் லண்டனில் வேலை செய்கிறோம். என் மனைவிக்கு 10 லட்சம் மாதம் ஊதியம். எனக்கு 8 லட்சம்ஊதியம். நாங்கள் இந்த எம்பிசியால் தான் அண்ணா யுனிவர்சிட்டியில் கோட்டாவில் படித்தோம். எங்களுக்கு இந்த வேலை கிடைத்தது' என்றனர். அதைவிட வேறென்ன பாராட்டு வேண்டும். மேலும் ராஜ்குமார் சொன்னார், 'நான் கோவிலுக்கு போவதில்லை; கடவுளை வணங்குவதில்லை; உங்களை கடவுளாக தெய்வமாக நினைக்கிறேன். என் வாழ்நாளில் பாதி ஆயுளை உங்களுக்குத்தான் தருகிறேன்' என்று சொன்னார். இதை விட வேறு என்ன விருது வேண்டும்'' என்றார்.

elections pmk Ramadoss
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe