Advertisment

'நாளைக்கே தேர்தல் வந்தாலும் சந்திப்போம்'-துரைமுருகன் பேட்டி  

n

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொங்கலையொட்டி திமுக தொண்டர்களை சந்தித்தார். இதில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பு பிரதமராக இருந்த போதும் இப்போதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தர கூடாது என்பதில் வைராக்கியமானவர். அவர் இடத்தில் இருந்து தமிழகத்திற்கு சாதகமான வார்த்தைகள் வராது. டிரிபியூனல் அமைப்பதை எதிர்த்தார். டிரிப்யூனல் கெஜெட்டில் போடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்திற்கு எதிராகக தான் பேசுவார்.

Advertisment

மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என தேவகவுடா கூறுவது, அவர் பிள்ளைகள் அரசியல் நடத்த முடியும் என்பதால் தேவகவுடா ஆதாயத்திற்காக பேசுகிறாரோ, வெறுப்பாக பேசுகிறாரோ ஆனால் தமிழகத்திற்கு எதிர்ப்பாக தான் பேசுவார்.

Advertisment

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் அவர் கையையா பிடித்துள்ளோம். திமுக நாளைக்கே தேர்தல் வந்தாலும் சந்திப்போம். இது கொள்கைக்காக உருவாக்கப்பட இயக்கம். திமுக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என நம்புகிறோம்.

தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டதற்கு, 'அவர் எதிர்க்கட்சி தலைவர். எப்போது தமிழகம் நன்றாக உள்ளது என கூறப்போகிறார். அவர் அப்படி தான் கூறுவார்' என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe