Even after Diwali, a crowd of people beat at 2 in the morning

Advertisment

தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்று முடிந்திருக்கும் நிலையில் ஈரோட்டில் தீபாவளிக்கு பண்டிகைக்கு அடுத்த நாளான இன்றும் பொதுமக்கள் கடைவீதிகளில் படை எடுத்தனர்.

ஜவுளி வியாபாரத்திற்கு பெயர் போன ஈரோட்டில் இரவு நேர ஜவுளிக் கடைகள், ஜவுளி சந்தை என எப்பொழுதுமே கூட்டம் அலைமோதி வருவது வாடிக்கை. இருப்பினும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே ஜவுளி சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாளான இன்றும் அதிகாலையிலேயே பொதுமக்கள் ஜவுளிக்கடைகள் முன்பு குவிந்தனர்.

காரணம், தீபாவளி பண்டிகைக்காக கொண்டுவரப்பட்டு விற்கப்பட்ட துணிகளில் மீதம் இருக்கும் துணிகள் 50 சதவீத முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடியில்விற்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. 'ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்' காரணமாக ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஈரோடு ஆர்.கே.வி.சாலையில் அதிகாலை இரண்டு மணி முதலில் ஜவுளிக்கடைகள் முன் மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு காணப்பட்டது.