Advertisment

33 திருடர்களில் ஒருவர் காமெடியன் ஜெயக்குமார். – திமுக எ.வ.வேலு பதிலடி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் 9 ஒன்றியங்களில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. கிராம வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 4 வாக்குகளை வாக்காளர்கள் செலுத்தி வருகின்றனர்.

Advertisment

e.v. velu about minister jayakumar

தண்டராம்பட்டு ஒன்றியம் சே.கூடலூர் கிராமத்தில் வாக்களிக்க தனது குடும்பத்தினருடன் திமுக மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வந்தார். வாக்களித்துவிட்டு வந்த வேலு செய்தியாளர்களிடம், "திமுக வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கை தேர்தல் களத்தில் தெரிந்தது. இந்த உள்ளாட்சி தேர்தல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம். வாக்கு எண்ணிக்கையின் போது ஆளும்கட்சியான அதிமுகவின் அழுத்தத்தில் வெற்றிகளை மாற்றி அறிவிக்க வாய்ப்புள்ளது எனச்சொல்லியே எங்கள் கட்சி சார்பில் மனு தந்துள்ளோம். கடந்த 2011ல் அப்படித்தான் செய்தார்கள். அதனால் தான் முன்கூட்டினே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மனு தந்துள்ளோம். காவல்துறை கண்காணிப்பாளரிடம் தரப்பட்ட மனுவில், பதட்டமான வாக்குசாவடிகள் குறித்து பட்டியல் தந்திருந்தோம். அங்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது" என்றார்.

Advertisment

பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக ஸ்டாலினை விமர்சனம் செய்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, "அலிபாபாவும் 40 திருடர்களும் என ஒரு படத்தை பார்த்தோம். அந்த 40 திருடர்களில், மாநிலத்தில் ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் 33 திருடர்கள் உள்ளார்கள். அந்த திருடர்களில் ஒருவரான ஜெயக்குமார், சினிமாவில் வரும் காமெடி நடிகரை போன்றவர். அப்படிப்பட்ட காமெடி நடிகரின் விமர்சனங்களால் தலைவரின் புகழ் குலையாது" என்றார்.

D JAYAKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe