
திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு எதிர்புரத்தில் காமராஜர்புரம் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி பொதுமக்களால் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டன. அப்பகுதியில், 1800ஆம் வருடம் முதல் உயர்பதவியில் வகித்து இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவரது கல்லறை திண்டுக்கல் நகர் பகுதியில் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்பின் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியத்தை தொடர்புகொண்டு, யுரோப்பியன் கல்லறைகள் திண்டுக்கல்லில் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்புக்கு இடையே கல்லறை தோட்டம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை 220 ஆண்டுகளுக்கு முன்பாக கதவுகளுடன் அமைக்கப்பட்டிருந்தன, கதவுகளைத் திறந்தபோது கல்லறை முழுவதும் மரம் செடி கொடிகளால் சூழ்ந்திருந்தன. மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் கதவுகள் திறக்கப்பட்டன. ஒருவரின் கல்லறையைத் தேடி வந்தால் உள்ளே 54க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆய்வாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லறைத் தோட்டத்தை சுத்தம் செய்து அரசு கூறிய பிரான்சிஸ் வைட் எல்லீஸ் கல்லறையைத் தேடிவந்தனர்.
இந்து கல்லறைத் தோட்டத்தைத் தற்சமயம் மூன்று தலைமுறைகளாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஞான்ராஜ் குடும்பம் பாதுகாத்துவருகிறது. இது திண்டுக்கல் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.