Advertisment

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இ.டி சம்மன்

nn

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ்ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தை பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

Advertisment

ஆனால் கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அண்மையில் சென்னை உள்ளிட்ட 10 மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisment

nn

இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி மோசடி தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்த ஜுவல்லரி கடையில் விளம்பத்தில் நடித்தவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakashraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe