Advertisment

தனி நபர்கள் செலுத்திய வருமான வரியை திருப்பி தர வேண்டும்.! மத்திய அரசுக்கு ஈஸ்வரன் வேண்டுகோள்

e

Advertisment

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்தியா பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. இதை சரிக்கட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர், ‘’இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் இந்த அறிவிப்பு மட்டுமே போதாது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கிறது. பிரதமர் அவர்கள் கூட 21 ஆண்டுகள் இந்தியா பின்தங்கி போய்விடும் என்று எச்சரித்திருந்தார். இன்றைய சூழலில் 21 ஆண்டுகள் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது இந்தியா பின்தங்கி போகும் நிலை தான் இருக்கிறது.

கொரோனா வைரஸ்க்கு முன்பாகவே இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்ததை நாம் அறிவோம். இந்தியா முழுவதும் பல தொழில்கள் ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமல் முடங்கி போய்விட்டது. இப்போது கொரோனா நோய் தாக்கத்தினால் மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் நிலைமை சரியான பிறகு மீண்டும் திறக்கப்படுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் பல நெருக்கடிகளை தாண்டி சிறிய இலாபத்துடன் தொழில் செய்து வந்தவர்களுக்கு தொழிலை தொடர முடியாத சூழலே நிலவுகிறது.

Advertisment

கடந்த 10 ஆண்டுகளாக செலுத்திய வருமானவரியில் 25 சதவீத வரியை கார்பரேட் நிறுவனங்களை விடுத்து மற்ற வருமானவரி செலுத்தியவர்களுக்கு திருப்பி தரும் போது பண புழக்கம் அதிகரிக்கும். திருப்பி தரப்படும் வரி பணத்தின் மூலம் தற்போது மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் பிறகு தொடர்ந்து நடக்கும். தனிநபர்கள் கட்டிய வருமானவரியை திருப்பி தரப்படும் போது எல்லோர் கையிலும் பணம் இருக்கும். இதன் மூலமாக தான் முடங்கிய பொருளாதாரத்தை முடுக்கிவிட முடியும். இந்த வாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தர முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

E.R.Eswaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe