Advertisment

தப்பியோடிய கைதி! பெண் காவலர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுத்த எஸ்.பி! 

Escaped prisoner! SP suspended two female guards!

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் மீது வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் மற்றும் சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Advertisment

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூந்தோட்டம் பகுதியில் சாரயம் விற்ற வழக்கில் கைது செய்தனர். அதன்பிறகு அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

சிறையில் இருந்த கஸ்தூரிக்கு கடந்த 24ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. அதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. சிகிச்சையில் இருந்த கஸ்தூரிக்கு 2 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக அதிகாலை நேரத்தில் கைதி கஸ்தூரி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடினார்.

இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த 2 பெண் காவலர்கள் உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து தப்பியோடிய பெண் கைதியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் எஸ்.பி. விஜயகுமார் அந்த இரண்டு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

police Tiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe