ADVERTISEMENT

ஈரோட்டில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்'-குவிந்த மக்கள்

11:12 PM Sep 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோட்டில் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுக்கான ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக பன் ஸ்ட்ரீட் என்ற பெயரில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

ஈரோடு சோலார் அடுத்த புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடத்தப்பட்டு வரும் ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சுமார்5 ஆயிரத்திற்கும் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 80 அடி சாலையில் மேடை அமைக்கப்பட்டு திரைப்படப் பாடல்களுக்கு வயது வித்தியாசமின்றி ஆண், பெண் என இருபாலரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்று நடனமாடினார்.


மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுக்கான இந்த பன் ஸ்ட்ரீட் நடத்தப்படுவதாகவும், காலையிலே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இதில் சிலம்பம், கும்மி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தனர். சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களைத் தொடர்ந்து ஈரோட்டில் நடத்தப்பட்டது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT