Advertisment

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு (படங்கள்)

ஈரோடு, பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, பெரியார் திடல், அறிஞர் அண்ணா நகரில், இன்று (24-3-2018) காலை 10.00 மணி அளவில் மாநாட்டின் முகப்பின் முன்பு உள்ள 65 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், திமுக கொடியினை பொதுச்செயலாளர் பேராசிரியர் – செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், தி.மு.க. மாணவர் அணி இணைச் செயலாளர் முனைவர் கோவி.செழியன், எம்.எல்.ஏ., ஏற்றி வைத்து, ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு துவங்கியது.

Advertisment

திமுக கொடியேற்றி வைத்த உடன் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., அவர்கள் மாநாட்டினை திறந்து வைத்தார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் சு.முத்துசாமி வரவேற்புரையாற்றி, மாநாட்டு தலைவரை முன்மொழிந்தார். மாநாட்டுத் தலைவர் கழக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றியதைத் தொடர்ந்து, திமுக முன்னணியினர் உரையாற்றினர்.

Advertisment
Conference Erode pictures Zone
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe