Erode Zone Conference of DMK

Advertisment

தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாடு மார்ச் 24, 25 தேதி சனி, ஞாயிறு இரு நாட்கள் ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. முதல் நாள் 3 லட்சம் பேரும், இரண்டாம் நாள் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டரை்.

Erode Zone Conference of DMK

தொடர்ந்து மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று மாநாட்டு மேடையில் 118 மணமக்களுக்கு திருமண நிகழ்வு நடந்தது. கட்சியின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ஒவ்வொரு இணையருக்கும் தாலி எடுத்துக் கொடுத்தார். மண்டல மாநாட்டில் 118 மணமக்கள் மாலை மாற்றி திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண விழாவை காண பல ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர் மாநாட்டுப் பந்தல் இன்றும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.