திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் 40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 36 பேர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை முதல் முறையாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு இளைஞர் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து 10.04.2020 பிற்பகல் 1.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisment

Erode youth recovering from corona infection

திருச்சி மாநகரில் இந்த நோய் தொற்றினால் நகரின் முக்கியமான இருபது சாலைகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுயிரை துச்சமென நினைத்து,சேவையாற்றி வரும் மருத்துவக் குழுவினருக்கும், திருச்சி மாவட்ட கரோனா தடுப்புக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து மாநகர மக்கள் மருத்துவமனை முன்பு நின்று அந்த நபரை அனுப்பி வைத்தது பெரும் நெகிழ்வான சம்பவமாக இருந்தது.