Advertisment

20% போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

Erode Transport workers demanding 20% ​​bonus!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என 9ஆம் தேதி ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட பொதுசெயலாளர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் ஜான் கென்னடி முன்னிலை வகித்தார். இதில், 2019-2020ஆம் ஆண்டுக்கான 10 சதவீத போனஸ் அறிவிப்பினை அரசு திரும்ப பெற வேண்டும். தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி 20 சதவீத போனஸ் வழங்கிட வேண்டும்.

Advertisment

பண்டிகை முன் பணம் ரூபாய் 10 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., ஓய்வூதியர்கள் சங்கம், தொ.மு.ச. எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Transport-unions Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe