ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். மற்றொரு புறம் மதுபானம் வாங்க வந்த குடிமகன்கள், கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Erode Etas mac issue

Advertisment

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை தற்போதைக்கு திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisment

ஆனால் குடிப்பதற்காக வந்த குடிமகன்கள், தங்களுக்கு மது வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டனர். வேறு வழி இல்லாத அதிகாரிகள் அவர்களை, தங்கள் வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் கொண்டு போய்விட்டனர்.