இந்த நவீன யுகத்தில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வந்து கொண்டே இருக்கிறன.

Advertisment

erode students invent small size satellite

அந்த வகையில் இன்று ஈரோடு மாணவர்கள் தாங்கள் கண்டுபிடித்தசெயற்கைகோளைகலெக்டர் கதிரவனிடம் அவரது அலுவலகத்தில் வந்து இன்று செய்து காட்டினார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்துவந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தபிளஸ்-2மாணவர்கள்ஸ்ரீநிதி,நவநீதன் ஆகியோர் தாங்கள் கண்டுபிடித்த உலகிலேயே மிகச் சிறிய செயற்கைகோளை கொண்டு வந்து கலெக்டர் கதிரவனிடம் காட்டினர்.அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அவரிடம் விளக்கினர்.

Advertisment

இது குறித்து மாணவர்கள் ஸ்ரீநிதி நவநீதன் கூறும்போது,நாங்கள் கண்டுபிடித்த செயற்கைக்கோள் உலகிலேயே மிகச் சிறிய செயற்கை கோள் ஆகும்.இதன் எடை 18 கிராம் ,உயரம் 3 சென்டிமீட்டர் அளவு உள்ளது.இந்த செயற்கைக்கோளுக்கு ஸ்ரீ சாட்என்று பெயரிட்டுள்ளோம். இந்த செயற்கைக்கோளை வைத்து நாம்கடல் மட்ட உயரம், வெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவற்றை நமதுசெல்போன் மூலம் காண முடியும். இதற்கு செலவும் மிக குறைவு. வேளாண்மை துறைக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன் மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.