Skip to main content

பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

 

erode struggle

 

ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ்நிறுத்தம் பகுதியில் 'திராவிடர் பேரவை' அமைப்பினர் 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு 'திராவிடர் பேரவை' தலைவி மாசிலாமணி தலைமை தாங்கினார்.

இதில், "பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும், மதக் கலவரத்தை தமிழகத்தில் திட்டமிட்டே உருவாக்க முனைகிறது தமிழக பா.ஜ.க. கரோனா பரவும் சூழலில் பாரதிய ஜனதாவினர் மேற்கொள்ளும் வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும்" என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு போலீசார் அனுமதி மறுத்திருந்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாசிலாமணியுடன் 4 பெண்கள் உட்பட அந்த அமைப்பு நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து, பிறகு மாலையில் விடுவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்