Advertisment

போலி முகவரி; இலங்கை தமிழர் கைது!

erode srilangan tamil refugee passport incident fake address issue

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இதில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்தவர் கவுசிகன் (வயது 33). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

Advertisment

இந்நிலையில் கவுசிகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுப்பதற்காக போலி முகவரியை கொடுத்து விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த போது தான் கவுசிகன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பதும், அவர் இலங்கை தமிழர்எனவும்தெரிய வந்தது.

Advertisment

இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த போது தனது முகவரிக்கு பதிலாக தனது நண்பரின் முகவரியை தனது முகவரியாக கொடுத்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் தனது ஆதார் அட்டையையும் அந்த விண்ணப்பத்தில் இணைத்து இருந்தார். இது குற்றம் என்று தெரிந்தும் இந்த செயலில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து கவுசிகனை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Address Passport Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe