Advertisment

மலை மக்களின் வரவேற்பை பெற்ற ஈரோடு எஸ்.பி!

Erode SP welcomes hill people

ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்த பர்கூர் மலை பகுதி உட்பட்ட கத்திரி மலை கிராமத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகைகள் மலை கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு முகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் நலஉதவி வழங்கும் விழா 31ந் தேதி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார்.

Advertisment

பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சென்னம்பட்டி வனசரகர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மாவோயிஸ்ட் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ,சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

மாவட்ட எஸ்.பி.சசிமோகன் மலைவாழ் மக்களுக்களிடம் பேசுகையில், சட்டவிரோத செயல்கள், ஆதார் அட்டையின் முக்கியத்துவம், நமது பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு, மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, அரசின் சார்பாக அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவித்தொகைகள், கரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி போடுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், மலைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் கத்திரி மலையைச் சேர்ந்த 90 மலை குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், சோப்பு பவுடர், பிளாஸ்டிக் குடம், வெள்ளை வேட்டி, போர்வை, துண்டு ,தலையணை, சில்வர் தட்டு, பாய், 30 பள்ளி குழந்தைகளுக்கு தலா ஒரு டிபன் பாக்ஸ், எழுது பொருட்கள் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு சோலார் விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.

தொடர்ந்து மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நேரில் மலை பகுதிக்கு சென்று மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக நல உதவிகள், விழிப்புணர்வு போன்ற உதவும் செயல்களை ஈரோடு எஸ்.பி. சசிமோகன் செய்து வருவது ஆதிவாசி, மலைவாழ் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

forest police Erode
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe