Advertisment

புதுமைகள் செய்துவரும் இளம் எஸ்.பி... மக்கள் பாராட்டு...

ஈரோடு மாவட்டத்திற்கு காவல்துறை எஸ்.பி.யாக சக்திகணேசன் பொறுப்பேற்ற இந்த ஒரு வருடத்தில் போலீஸ் பணிகளை கடந்து பொது மக்களுக்கான நற்செயல்களிலும் போலீசாரை ஈடுபடுத்தி வருகிறார்.இது பொதுமக்கள் பலரது மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisment

erode sp sakthi ganesan plans for people

வயதானவர்கள், பெற்றெடுத்த வாரிசுகளால் தனித்து விடப்பட்டவர்கள், கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் நேரிடையாக காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு போன் செய்தால் போதும். "ஹலோசீனியர்ஸ்" என்ற இந்த திட்டத்தின்படி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே போலீஸ் சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள்.

அடுத்து அவர் அறிவித்த திட்டம் "லேடீஸ் ஃபஸ்ட்" இதில் ஏதாவது வகையில் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை ஒரு போன் செய்தால் போதும், மகளிர் போலீசார் அவர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று தீர்வு காண்பதோடு பெண்கள் பிரச்சனையில் ரகசியமும் காக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதனை தொடர்ந்து "எக்ஸ்பிரஸ் ஃபிரி வே" இது 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை கொண்டு வரும் போது விரைவாக மருத்துவமனை செல்ல அவ்வழியில் உள்ள ட்ராபிக் போலீசாருக்கு தகவல் அனுப்பி சாலையில் ட்ராபிக் ஏற்படாமல் வைத்திருப்பது.

இப்போது மற்றொரு புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார் எஸ்.பி. சக்தி கணேசன். அது "அர்பணிப்பு பீட்".

பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் அர்ப்பணிப்பு போலீஸ் பீட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பீட்டிற்கு பிரிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு இன்று ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் அவர்களுக்கு உண்டான பயிற்சி, பணிகள் குறித்தும் எஸ்பி சக்திகணேசன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறும்போது, "ஈரோடு மாவட்ட காவல் துறையில் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, ஈரோடு என ஐந்து சப் டிவிசன்கள் உள்ளது.

இந்த ஐந்து சப்டிவிசன்களில் அர்ப்பணிப்பு அதாவது "டெடிகேட்" என்கிற போலீஸ் பீட் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 3 போலீசார் என மொத்தம் 54 பேர் ஒதுக்கீடு செய்துள்ளேன். அவர்கள் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பிரச்னை, சாலை வசதி முதல் குடிநீர் பிரச்சனை வரை அதற்கான உண்டான தீர்வு என்ன என்பதையும் மக்களிடம் எடுத்து சொல்வார். மேலும், அந்த பகுதிகளில் உள்ள பழைய குற்றவாளிகள் யார்? அவர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா? மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் உள்ளார்களா என்பதை முன்பே அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த போலீசார் மக்களிடம் உறவு போல் நெருங்கி பழகி, அவர்களுக்கு நன்கு தெரிந்த நண்பர் போல இருக்க வேண்டும். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இனக்கமான நல்லுறவு மேம்படும், குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறையும் என நம்புகிறோம்." என்றார் புதுமைகளை தொடர்ந்து செய்து வருகிறார் இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான சக்தி கணேசன்

ramadas interview erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe