Erode Sp A loving couple sought refuge in the office today

ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (23). பி.எஸ்சி.டெக்ஸ்டைல் பேஷன் டிசைன் படித்த பட்டதாரி. இவர் ஈரோட்டில் உள்ள பிரபலமான ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே ஜவுளி கடையில் கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இந்துபிரியா(20) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

Advertisment

இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரும் கடந்த 2 வருடங்களாககாதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும்தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குஇரண்டு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்களது காதலில்மோகன்ராஜ் - இந்துப்ரிஜோடி உறுதியாக இருந்தனர். கடந்த 8-ந் தேதி இந்துபிரியாவீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டார்.

Advertisment

இந்நிலையில் 10-ந் தேதி காலை பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் மோகன்ராஜ் - இந்துபிரியா ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து இருவரது வீட்டினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்புக்கும் சமரசத்தை ஏற்படுத்தினார்கள்.