Advertisment

மலைவாழ் மக்களுக்கு உதவிய ஈரோடு எஸ்.பி...

Advertisment

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஒரு மாதம் முன்பு பொறுப்பேற்ற எஸ்.பி. தங்கதுரை, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் நேரில் சென்று அங்கு பணியாற்றும் காவலர்களைச் சந்தித்து, "நமது பணி என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது, அவர்களிடம் நன்பர்களாகப் பழக வேண்டும் மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதேபோல் அதிக பணிச்சுமை இல்லாமல் காவல் பணியை ஈடுபாட்டுடன் செய்தால் போதும். பொதுமக்களுக்கு நாம் எதிரியாக தெரியக்கூடாது. அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்" என போலீசாரை உத்வேகமூட்டி வருகிறார்.

அதே போல் மக்களையும் நேரில் சந்திக்கிறார். 11-ஆம்தேதி மதியம் அந்தியூர் அருகே உள்ள கிணத்தடி என்ற மலைக்கிராமத்திற்குச் சென்று அந்தக் கிராம மக்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், மற்றும் காய்கறிகளைக் கொடுத்ததோடு முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், டிபன் பாக்ஸ் போன்றவற்றை வழங்கியிருக்கிறார். ஒரு காலத்தில் அதாவது சந்தன வீரப்பன் இருந்தபோது இரு மாநில அதிரடிப்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டு போலீஸ் என்றாலே பயபீதியுடன் இருந்த மலைவாசிகளிடம் அன்பாகப் பேசி அவர்களுக்கு உதவியும் செய்த எஸ்.பி. தங்கதுரையை வியந்து பார்த்தார்கள் கிராம மக்கள்.

help police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe