ADVERTISEMENT

விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்; லைசென்ஸை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை

06:39 PM May 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் வாகன விதிமுறைகளை மீறுவதால் பல்வேறு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இதனைக் கண்காணிக்க ஈரோடு தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் அங்கங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகள் மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த ஏப்ரலில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 54 பேர் மீதும், ஃபோன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 3 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 594 பேர் மீதும் என மொத்தம் 851 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 9 பேர், அதிவேகமாகச் சென்ற ஒருவர் என 10 பேர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT