Skip to main content

ஈரோடு கருமுட்டை விவகாரம் - ஸ்கேன் மையத்துக்கு சீல்!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

ரகத

 

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்திற்குப் புகார் வந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஈரோடு எஸ்.பி சசிமோகன் உத்தரவின்படி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்து காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

 

இப்படி பல வருடங்களாக கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் போதும் மருத்துவமனையின் தரப்பில் இருந்து இவர்கள் பணம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் தற்போது சீல் வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் ஸ்கேன் செய்து கருக்கலைப்பு; தர்மபுரியில் சிக்கிய கும்பல்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

 Abortion by scan at home; A gang trapped in Dharmapuri

 

தர்மபுரியில் சட்டவிரோதமாக வீட்டில் ஸ்கேன் இயந்திரங்களை வைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா எனத் தெரிவித்து வந்த கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சட்டவிரோதக் கருக்கலைப்பு நடைபெற்றது தொடர்பான தகவல்களை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பெண் குழந்தைகளை அதிகளவில் கருக்கலைப்பு செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மொரப்பூர் பகுதியில் ஆண், பெண் விகிதாச்சார பிறப்பு என்பது குறைவாக இருந்ததையடுத்து தர்மபுரி மருத்துவத் துறையின் இயக்குநர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா எனச் சொல்வது மற்றும் கருக்கலைப்பு செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

 

 Abortion by scan at home; A gang trapped in Dharmapuri

 

ராக்கம்மாள் என்ற பெண் வீட்டில் இது இயங்கி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி பகுதியில் தனியார் மருத்துவமனையில் ராக்கம்மாள் பணியாளராக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவருக்கும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கருக்கலைப்பு செய்பவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டில் இயந்திரங்களை வைத்துக்கொண்டு கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

நேற்று தர்மபுரி மருத்துவத் துறையின் இயக்குநர் சாந்தி நேரடியாக இந்த கும்பலை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். இதில் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதற்கும், கருக்கலைப்பு செய்வதற்கும் இந்த கும்பல் 30 ஆயிரம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

 

 

Next Story

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்... சேலத்தில் பிரபல மருத்துவமனைக்கு சீல்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Egg sale issue... Salem famous hospital sealed!

 

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்து காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

 

பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் பொழுதும் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இடைத்தரகராகச் செயல்படும் மாலதிக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளனர். கருமுட்டையை கொடுத்து பணம் பெற ஏதுவாக சிறுமியின் வயதை 20 என காட்ட போலி ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளனர். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Egg sale issue... Salem famous hospital sealed!

 

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட  வெளிமாநில மருத்துவமனைகளிலும் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்டிருப்பது தெரிவந்தது.

 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சு, ''நிர்ப்பந்தம் செய்து 16வயது சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டையை அவரது குடும்பத்தினரே எடுத்து விற்றுள்ளனர். தானம் தர விரும்பினாலும்21 வயதான ஒருவரிடம் இருந்துதான் கருமுட்டையை எடுக்க முடியும். கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு, சேலத்தில் செயல்பட்டு வரும் சுதா, ஓசூர் விஜய்,பெருந்துறை ராம்பிரசாத் என நான்கு தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகள் 15 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சேலம் சுதா மருத்துவமனைக்கு மருத்துவத்துறையினர் சீல் வைத்துள்ளனர்.