Skip to main content

சத்தியமங்கலத்தில் இருவர் தற்கொலை; போலீசார் விசாரணை

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

erode sathyamangalam incident police investigation started 

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று ஒரே நாளில் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரிவர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி  உஷா கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பல முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் 20 தேதி சத்தியமங்கலம் ஆத்துப்பாலம் மீன் கடை அருகே ஆண்டவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

 

இதேபோல் சத்தியமங்கலம் வரதம் பாளையம் , தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசன் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்