Advertisment

ஆபாச வீடியோக்கள், படங்கள்- கைதான நபரின் செல்போனில்... போலீசார் அதிர்ச்சி...

ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி் மாணவி ஒருவர் அவர் படிக்கும் கல்லூரி அருகே உள்ள ஒரு கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் வயது 37 என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.

Advertisment

eroad

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மாணவியுடன் ராதாகிருஷ்ணன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தினார். பிறகு ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள், அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது, அந்த மாணவியிடம் ஆபாச வீடியோகளைக் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டார்.

Advertisment

பின்னர் அந்த மாணவியிடம், உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கடந்த மூன்று வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்து கருகலைப்பு செய்திருக்கிறார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலமுறை பலாத்காரம் செய்திருக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதன் தொடர்ச்சியாக தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்த இறுதியாக பயந்துபோன அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.

harassment Tamilnadu Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe