Advertisment

பெண்கள் வேட்டை... !  -ஈரோடு இளைஞர்மீது அடுத்தடுத்து குவியும்  பாலியல் புகார் 

ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன். இவர் மீது ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ராதாகிருஷ்ணன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார். மேலும் தன்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், ராதா கிருஷ்ணன் நூறுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும் அவரது புகாரில் கூறியிருந்தார்.

Advertisment

r

இதை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கொண்ட புகார் உண்மை என தெரிய வந்தது. இதன் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ராதாகிருஷ்ணன் பல பெண்களிடம் இதே போன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளிவந்த நிலையில்அடுத்ததாக இன்று ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்து ராதாகிருஷ்ணன் தன்னையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

r

அந்த மனுவில் அவர், எனக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். என் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மதுக்கடையில் வைத்து எனது கணவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிற்கு இருவரும் நண்பர்களானார்கள். அதைக் காரணமாக வைத்து அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசுவார். எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்சினையை அவரே ஏற்படுத்தி பிறகு சமாதான படுத்தி வைப்பார். நல்ல மனிதர் போல் நடித்தார். என் ஏழ்மையான சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு உதவ தொடங்கினார்.

என் வீட்டுக்கு என் கணவர் வீட்டில் இல்லாத சமயத்திலும் அடிக்கடி வரத் தொடங்கினார். இந்நிலையில் ஒருநாள் ராதாகிருஷ்ணன் என்னை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அதை வைத்தே என்னை மிரட்டி மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதை வெளியே சொல்ல முடியாமல் வேதனையுடன் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருப்பதை தெரிந்து கொன்டேன். பழகிய நண்பரின் மனைவி என்றும் பாராமல் என்னை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்த இந்த ராதாகிருஷ்னன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.

பாலியல் குற்றவாளி ராதாகிருஷ்னனால் சீரழிக்கப்பட்ட பெண்கள் பட்டியல் மேலும் தொடரும் என்கிறார்கள் ஈரோடு பெண் போலீசார் .

erode real estae rathakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe