/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art hand cop_42.jpg)
ஈரோடு ரயில் நிலையம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு நேற்றுமுன் தினம் இரவுதகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஈரோடு நாடார் மேடு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் (வயது 48) என்பதும் இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. ராஜேந்திரன் ஈரோடு ரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனுடன் மது அருந்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன்(வயது 45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், கண்ணப்பனும் நண்பர்களாக இருந்து வந்ததுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் போதையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மரக்கட்டையால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதனால் சிறிது நேரத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து கண்ணப்பனை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Follow Us