erode perundurai husband and wife issue related incident

மனைவி பிரிந்துசென்ற வேதனையில் கணவர் விஷமருந்திதற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் (வயது 40). இவரது மனைவி பிரீத்தா. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதத்தில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

Advertisment

இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிகமாகமது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அதனைகவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.