தேர்தல் புறக்கணிப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

 Erode, people hold banners saying they are going to boycott the elections

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு சிலபகுதிகளில்,நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதபிரச்சனைகளைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் இன்று சாலையோரம்,ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைக்கப்பட்டது. அப்போது, சாலையோரம் சென்ற வாகன ஓட்டிகள் இந்தப் பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப்பேனரில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது, “ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகரில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்வசித்து வருகிறோம். இங்கு தனிநபர் ஒருவர் பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதைக் கண்டித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் கிட்டத்தட்ட 6 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனைக்கண்டித்து வருகிற பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என எழுதப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனை அடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பேனர் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode
இதையும் படியுங்கள்
Subscribe