erode panchayat election dmk candidate win admk candidate approach to chennai high court

ஈரோடு ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷுக்கு எதிராக அ.தி.மு.க. வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில்,இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

Advertisment

ஈரோடு ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷின் வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க. வேட்பாளர் பூவேந்திரகுமார், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய சேர்மன் தேர்தலில், தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் கலந்துகொள்ளத் தடை விதிக்கக் கோரியிருந்தார். அவரது மனுவினை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டாளர் சார்பில், வழக்கறிஞர் சி.பிரகாசம் ஆஜரானார். வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலர் சார்பில் இரா.நீலகண்டன் வழக்கறிஞர் ஆஜரானார்.

Advertisment

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 259- ன் படி, மனுதாரர் கூறும் காரணமான, வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் தாக்கல் செய்யப்படும் படிவத்தில் தகவல்கள் குறிப்பிடப்படாதது, ஒருவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான காரணமல்ல என்பதை, தனது வாதத்தின்போது வழக்கறிஞர் நீலகண்டன் எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் டி.ராஜா, மனுதாரர் கோரியபடி இடைக்கால உத்தரவிட மறுத்து, மூன்று வார காலத்தில் பதிலுரை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.