eeee

கரோனா காலம் என்பது அன்றாடம் உழைத்து, அதில் வரும் வருமானத்தை வைத்து சமைத்து உண்டு வாழும் ஏழைகள் முதல் நவீன சூதாட்டமான ஆன்லைன் வர்த்த தொழில் புரிவோர் வரை எல்லோரையும் விட்டு வைக்காமல் தனது கொடுங்கரத்தால் பொருளாதார நஷ்டம், பின்னடைவை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை சூறையாடி வருகிறது.

Advertisment

ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்தவர் 40 வயதான நரசிம்மன், இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. நரசிம்மன் நடத்தி வந்த தொழில், ஆன்லைன் வர்த்தகம். ஈரோடு சம்பத் நகரில் சேர்கான் என்ற ஆன்லைன் வர்த்தக ட்ரேடிங் அலுவலகத்தைநீண்ட நாட்களாக நடத்தி வந்தார்.

Advertisment

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தியஊரடங்கால் இவரது தொழிலும் சிதைந்தது. சென்ற சில மாதங்களாக நரசிம்மனுக்கு பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து மனவேதனையுடன் காணப்பட்ட நரசிம்மன்,தொழில்நடத்த முடியாமல் சிரமப்பட்டுவந்துள்ளார்.இதனால், தனக்கு ஏற்பட்ட பல லட்ச ரூபாய் கடனையும் அடைக்க முடியாது இருந்துள்ளார். வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப்பார்த்து பயந்து துடித்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நரசிம்மனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சம்பந்தமாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

Ad

எல்லா தொழிலும் சிதைவு ஏற்பட்டு இறுதி சுவாசத்தை நிறுத்திவருகிறது. இந்த 2020-இல் உழைப்பாளி முதல் சூதாடி வரை தற்கொலைகள் சராசரி இரண்டு மடங்கு கூடியுள்ளது. இந்த நிலையிலும் ஆட்சியாளர்கள் எதற்கும் அசராமல் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்கிறார்கள்.