தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநிலம் முழுவதும் ஆபரேஷன் 2.O என்ற பெயரில் போதைப்பொருள் தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள்விற்பனை நடைபெறுகிறதா என்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு இடங்களில் போதைப் பொருள் விற்பனையில்ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம்இருந்து போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு வட்டாட்சியர்அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதோடு சிலர் போதைப் பொருளால் போதையில் அங்கேயே படுத்துக் கிடந்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் போலீசில்புகார் அளித்திருந்தனர். வழக்கமாக அங்குள்ள பழைய கட்டடத்தில் ஏராளமானோர் படுத்து உறங்குவது வழக்கம். இதில் ஒரு சிலர் மது அருந்துவதும், போதைப்பொருள்பயன்படுத்துவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை போலீசார் அந்தப் பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடினர். இதில் போதைப்பொருளைபயன்படுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்தனர். அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.