Advertisment

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு; அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

erode municipal corporation dmk versus admk related controversy 

கள்ளச்சாராயத்தைஒழிக்கவும்போலி மதுபானங்களால்ஏற்படும் உயிரிழப்புகளைத்தடுக்கவும்தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும்உள்ள மாவட்டத்தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் மாநிலத்தில் பெருகி வரும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தை கண்டித்துஇன்று நடைபெற்ற ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து சூரம்பட்டி ஜெகதீசன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

பேரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது, திமுக ஆட்சி பற்றி அவதூறாகக் குறிப்பிட்டதற்கு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் கடும் எதிர்ப்புதெரிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் தங்களை மிரட்டியதாகவும், திட்டியதாகவும் செய்தியாளர்களிடம் அதிமுக உறுப்பினர்கள் புகார் செய்தனர்.

councilor Erode admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe