Advertisment

இப்படியா ஒரு அமைச்சர் பேசறது? கொதித்த ர.ர.க்கள் 

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவாக்குறிச்சி இந்த 4 சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இதில் அரவாக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் புன்னம்சத்திரம் என்ற பகுதியில் 40 வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாளராக அதிமுகவில் நியமிக்கப்பட்டவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பவானி கருப்பணன். இவரோட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணியை இணைந்து செய்து வந்தனர்.

Advertisment

k

ஈரோடு மாவட்டத்திலிருந்து சென்ற அதிமுக நிர்வாகிகள் சிலர் இன்று மாலை தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். அப்போது அங்கு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படித்தான் நம்மிடம் கூறினார்கள். " அந்தப் புன்னம் சத்திரம் பகுதியில் கருப்பனுக்கு கொடுக்கப்பட்ட 40 பூக்களிலும் உள்ள கட்சிக்காரர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை கருப்பண்ணனுக்கு தெரியவில்லை. அதாவது பிரச்சார பயணம் செய்தது முதலமைச்சர், துணை முதலமைச்சர்.

Advertisment

பிரசாரத்திற்கு வந்த போது ஆட்களை திரட்டி வந்தது, ஒவ்வொரு பூத்களிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அவர்களுக்கு முறையான பணப் பட்டுவாடா செய்வது இவைதான் மொத்த தேர்தல் பணியே. ஆனால் கருப்பணன் கட்சிக்காரர்களை அழைத்துப் பேசும் போது, "எப்பா ஒழுங்கா வேலை செய்யுங்கள்... பணத்தை வாங்கிவிட்டு ஏமாத்தாதீங்க, காசு வாங்கிட்டு போயி குடிச்சுப் போட்டு வீட்டுல போய் படுத்துக்காதீங்க.....இப்படி எல்லாம் பேசினாரு . கொடுத்த பணத்தை ஓட்டுப் போடுற அவனுக்கு கொடுக்காம கொண்டு போக கூடாது. முறையாக பணம் கொடுக்கலைன்னா நீங்க எல்லாம் நாசமாப் போங்க. உருப்படவே மாட்டீங்க.. உங்க குடும்பமே விளங்காது.. இப்படி எல்லாம் பேசினாரு கருப்பனன். இதுல அந்த ஊர் கட்சிக்காரங்க பல பேரு கோபப்பட்டு இந்த மாதிரி பேசுவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க. அப்படின்னு கூட சிலர் கேட்டாங்க.

அதுக்கு கருப்பணன், சும்மாவா பணத்தை கொட்டியிருக்கோம். அதுக்காகத் தானே பேசறோம் ஓட்டு குறைஞ்சுதுனா அப்புறம் பாருங்க.. அப்படின்னு மறுபடியும் மிரட்டி மிரட்டித் தான் பேசினார். வேற வழி இல்லாம கருப்பனனுடைய பேச்சை கட்சிக்காரங்க சகித்துக் கொண்டார்கள். இன்று தான் அவங்க எல்லாம் பரவாயில்லைப்பா இந்த ஆளு கிட்ட இருந்து எங்களுக்கு நிம்மதி அப்படின்னு சொல்லி அனுப்பி வச்சாங்க. அது மட்டும் இல்லைங்க. இவ்வளவு பேசுற இந்த கருப்பணன் வற்ற 23ஆம் தேதிக்கு பிறகு பார்க்கலாம். அப்படின்னு சூசகமாக கிண்டலடித்தார்கள் அந்த ஊர் கட்சிகாரங்க.

ஒரு அமைச்சர் எப்படி கட்சிக்காரங்க விட்ட, மக்கள் கிட்ட நாகரீகமா நடந்துக்கணும் என்று தெரிய வேண்டாமா? எங்களுக்கெல்லாம் அவமானமா போச்சுங்க. தேர்தல் வேலை செய்ய அவரோட சேர்ந்து செஞ்சது கேவலமாகத்தான் இருந்தது" என வருத்தத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள்.

k c karuppannan karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe