
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சூரம்பட்டி கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், சூளை, ரங்கம்பாளையம், கொல்லம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள மீன் கடைகள், மட்டன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து வட்டத்தில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
மீன் கடைகளில் ரோகி, கட்லா, ரூபா, ஜிலேபி போன்ற மீன் வகைகள் அதிக அளவில் நேற்று விற்பனையானது. ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள மீன் மார்க்கெட்டிலும் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் மீன்களுக்கு அதிகளவில் வரவேற்பு இருந்தது. கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடைகளில் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மாநகராட்சி அலுவலர்கள் மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். மேலும், ஆங்காங்கே மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் கண்காணித்தனர். வழிமுறைகளைப் பின்பற்றாத 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.