Advertisment

எனக்கு இவன் தான் வேண்டும்... கடத்தப்பட்ட காதல் ஜோடி... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

சேலம் அருகே சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி தாக்கப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியைச் சேர்ந்த செல்வன். இவரும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

Advertisment

incident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதனால் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் நேற்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சுமயமரியாதைத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்பு காதல் ஜோடிகளை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர்.

பின்பு காதலி இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம்ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

complaint Erode incident Investigation lovers politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe