Advertisment

பணம் வைத்து சூதாட்டம்; 8 பேர் மீது வழக்குப் பதிவு

erode kadathur police search and eight old man case filed 

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அரசூர் ஆற்றுப் பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அதனைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Advertisment

விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (வயது 64), ஆறுமுகம் (வயது 64), சந்திரன் (வயது 65), சுந்தரம் (வயது 70), அன்பழகன் (வயது 58), செல்வன் (வயது 53), திருமூர்த்தி (வயது 52), குமரேசன் (வயது 53) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள்,1600 ரூபாய் ரொக்கபணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe