erode incident- police investigation!

Advertisment

ஈரோட்டில் திருமணம் ஆன இளம்பெண் ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் இந்துமதி. பிஇ பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆகிறது. சென்னையில் ஐடி நிறுவனத்தில் கணவர் வேலை செய்துவந்த நிலையில் சென்னையில் கணவருடன் வசித்துவந்தார். இந்நிலையில் தோட்டக்காட்டூரில் உள்ள உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாட்டியை பார்ப்பதற்காக இந்துமதி வந்துள்ளார். அப்பொழுது பாட்டி வீட்டில் தங்கியிருந்த இந்துமதி நேற்று இரவு ரூமிற்குள் சென்று தாழிட்ட நிலையில் வெகுநேரமாக வெளியே வரவில்லை. உணவு சாப்பிட வலியுறுத்தி உறவினர்கள் கதவை தட்டியதபோதும் கதவு திறக்கப்படவில்லை.

n

Advertisment

இதனால் பயந்துபோன பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றநிலையில் அங்கு இறந்த நிலையில் இந்துமதி கிடந்துள்ளார். முகத்தில் முழுவதும் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டு டேப் போட்டு ஒட்டப்பட்டிருந்தது. மேலும் டியூப் மூலம் ஹீலியம் வாயுவை அவர் சுவாசித்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹீலியம் கேஸ் சிலிண்டரை இந்துமதி ஆன்லைனில் வாங்கியது தெரியவந்த நிலையில் போலீசார்இந்ததற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.