Advertisment

மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனையைத் தடை செய்திட வேண்டும்; வணிகர் மாநாட்டில் தீர்மானம்

Advertisment

erode fortieth traders association mega conference urge ban for  online medicine sale 

ஈரோடு மாவட்டம்சித்தோடு அருகேடெக்ஸ்வேலி மைதானத்தில் 40வது வணிகர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று (05.05.2023) தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

Advertisment

இன்று நடந்த 40வது வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கான முன் தேதியிட்ட வாடகை விதிப்புஅறிவிப்பைத்திரும்பப்பெற்றுக் கொள்ளுமாறும், 2007ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி சந்தை, மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகை நிர்ணயித்திடவும் வழக்குகள் அனைத்தையும்திரும்பப்பெற்று தற்போது உள்ள உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்திட அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். வணிக உரிமைகள் அனைத்தும் ஒரே இடத்தில் , ஒரே நேரத்தில்ஒற்றைச்சாளர முறையில் ஆயுள் உரிமமாக வழங்கிட வேண்டும். அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்திடும் முறையை அரசு அறிவித்திட வேண்டும் விதிமீறல்கட்டிடங்களுக்குக்கட்டிட வரைமுறை கால நீட்டிப்புநகரமைப்புசட்டங்களில் குடியிருப்பு மற்றும் வணிககட்டிடப்பகுதிகளைக்கால இடைவெளி உடன் இளம்காணத்தமிழகம் முழுவதும்சட்டத்திருத்தம் வேண்டும்.

நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்குப்பெரிதும் துணை நிற்கும் வணிகர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரியின் அடிப்படையில் ஓய்வூதியமும், காப்பீடும், குடும்ப நல நிதியும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் காலங்களில் வணிகர்களுக்கும் , வணிக குடும்பங்களுக்கும் அரசே காப்பீடு செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் இழப்பீடுகள், வழங்கிடவும் வேண்டும்.ஜிஎஸ்டிவரி முறையில் செய்யப்பட்டு வரும் தினசரி மாறுதல் மற்றும் திருத்தங்கள்காரணமாகத்தொழில்வணிகத்துறைமிகுந்த குழப்பத்தில் பல்வேறுஇனங்களைச்சந்தித்து வருகிறது. எளிய வரி என்கிற இலக்கை எட்ட மத்திய அரசுஜிஎஸ்டிவரியை மறு சீராய்வு செய்து ஒரே நாடு ஒரே வரி என்ற பிரதமரின் கொள்கையைஉறுதிப்படுத்திச்சரியான வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்.சிறு குறுவணிகர்களும்எளிதாகக்கையாளும் விதமாகவும், வணிகர்களுக்கு எதிரானஜிஎஸ்டிவரிகுளறுபடியையும், முரண்பாடுகளையும்கலைந்திட வேண்டும். இதற்காக வணிகப் பிரதிநிதிகள் இணைந்து ஒரு உயர்மட்ட குழுவை அமைத்திடவும் பழைய பொருட்களுக்கானஜிஎஸ்டிவரி ஒரே நிலையில் அதாவது 5 சதவீதம் மட்டுமேஅமல்படுத்திடப்பேரமைப்பு வலியுறுத்துகிறது.

நடைமுறையில் உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உரிய ஆய்வுகளுடன் களைந்து, ஆயுள் உரிமமாக அறிவித்திடவும் சாலையோர கடைகளை முறைப்படுத்திடவும் அபராதம் மற்றும் தண்டனைச் சட்டங்களில் உரியமாற்றங்களைச்செய்திடவும் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்புபெருகிடப்பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் உற்பத்தி சார் தொழில்களை ஊக்கிவிக்கவும் பெருநகரங்கள் நோக்கி பொதுமக்கள் புலம்பெயர்வதைத்தடுத்திடவும் தொழில் பூங்காக்கள்குறிப்பாகத்தென் மாவட்டங்களில்திருநெல்வேலிதூத்துக்குடி மதுரை, விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில்அமைத்திடத்தமிழரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகளே அனுமதி வழங்கி அதற்கு முரண்பட்டகாரணங்களைச்சொல்லி முடக்கி வைக்கின்ற தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்து வேலை வாய்ப்பை உருவாக்கி சமூககட்டமைப்பைச்சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர்காக்கும் மருந்து பொருட்களைஆன்லைனில்விற்பனைசெய்யப்படுவதைக்கண்டிப்பாகத்தடுக்கப்பட வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டுஆன்லைன்வர்த்தகத்தை முறைப்படுத்திட வேண்டும்.ஜவுளித்துறைநூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும். ஈரோடு பெருநகரின்சுற்றுச்சூழலைப்பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும்சாயக்கழிவுகள்சுத்திகரிக்கப்பட, ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு போக்குவரத்து நெரிசல்அதிகரிப்பதைத்தவிர்த்திடும் வகையில் வெளிப்புறசுற்று வட்டப்பாதைகாவிரிக்கரையை ஒட்டி நெடுஞ்சாலை அமைத்து இதர மாவட்டங்களோடு போக்குவரத்தை இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர் நல வாரியம் நல வாரிய உறுப்பினர்கள் நிர்வாகிகள் நியமத்தோடு முழுமை பெற்ற வாரியமாக வணிகர் நலன்காத்திடப்பேரமைப்பு வலியுறுத்துகிறது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Erode Traders
இதையும் படியுங்கள்
Subscribe