ஒற்றை காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்துள்ளார். நேற்று (14/03/2020) மதியம் 12.00 மணியளவில் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்தில் உள்ள பர்கூர் காட்டுப் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த மலைவாசிகள் சிறு வன பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

ERODE FOREST AREA ELEPHANT INCIDENT FOREST OFFICERS

அப்போது ஆக்ரோஷமாக திடீரென வந்த ஒரு ஒற்றை காட்டு யானை வெள்ளையம்மாள் என்ற ஒரு மூதாட்டியை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்து கொன்றது. இதைப் பார்த்த மற்றவர்கள் அலறியடித்துக் கொண்டு காட்டில் இருந்து வெளியேறினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகளை மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.