உலகையே அச்சுறுத்தி மனித சமூகத்திற்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்து வருகின்ற கரோனாஇந்தியாவில் ஊடுருவி, குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து அதனுடையவேட்டையை செய்து வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.அதற்குக் காரணம் தொடர்ந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் எண்ணிக்கை கூடி வருவதேஆகும்.
மார்ச் மூன்றாம் வாரத்தில் கரோனா தமிழகத்தில் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியஅரசு அறிவித்த ஒரு அறிவிப்பாணையில்சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் மிகவும் கட்டுப்பாடுகளுக்குரிய மாவட்டங்களாக அறிவித்தது. இந்தநிலையில் கரோனாநோய்த் தொற்றையும், அதன் வீரியத்தையும்ஈரோடு மாவட்டத்தில் கட்டுப்படுத்த குறிப்பாக ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் முழுவதுமாக களம் இறங்கி போராடினார்கள்.
அதில் இந்த நோய் தொற்று வந்த வழியை கண்டுபிடித்தமாவட்ட நிர்வாகம்,தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்,தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த சிலராலும் இந்த நோய் ஈரோட்டில் ஏற்பட்டது.அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக அவர்கள் பயணித்த இடங்களை கண்டறிந்து முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அப்படி கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் ஈரோட்டில்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 70 பேர்.
அதன்பிறகுஒரு வாரத்திற்குஇந்த நோய் தொற்று யாருக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த பணியாளர்களும், ஊழியர்களும், அதிகாரிகளும் சேர்ந்து பணியன்றினர்.32 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஈரோட்டில் கரோனாபாதிப்பு தொடர்ந்து நான்கு பேருக்குவந்தது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள், சென்னையில் இருந்து வந்தவர்கள் என கணக்கில் 4 பேருக்குவந்தது. அவர்கள் மூலம் மக்களுக்கு நோய்த்தொற்று பரவுவது தடுக்கப்பட்டது.
தற்போது இந்த நோய்த் தொற்று 70 பேரோடுநின்றுள்ளது. தமிழகத்திலேயே ஈரோடு முன்னுதாரணமாக விளங்குகிறது. இதுபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றினால் நோய்த்தொற்றை தடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக இதுவிளங்குகிறது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறும்போது, நாங்கள் தொடர்ந்துஇந்த நோய்த்தொற்றுபரவாமல் கட்டுப்படுத்துவதற்கானஅனைத்து முயற்சிகளையும், ஒட்டுமொத்த ஊழியர்கள் மற்றும்பணியாளர்கள் எனஅனைவரும் சேர்ந்து செய்துவருகிறோம் என்றனர்.