ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ஈரோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில்தான் தேனியில் 50 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் நேற்று இரவு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.

e

Advertisment

இதை அறிந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் இறங்கினர். இது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது என அரசியல் கட்சியினர் தேர்தல் அதிகாரியை கேள்வி கேட்க, தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பல்லவிபல்தேவ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்க வேண்டும் என்றார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சில பூத்களில் மறு தேர்தல் நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் அவை என்றார். மேலும் அந்த இயந்திரங்கள் கோவையில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் அதில் 20 பேக் ஈரோடு தொகுதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாக கூறினார்.

தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்பு ஈரோட்டை பரபரப்பாக்கியது. ஈரோட்டுக்கு எதற்கு புதிதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் என அரசியல் வட்டாரத்தை கொதிக்கவைத்திருக்கிறது.