Skip to main content

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; தீப்பிடித்து எரிந்த தென்னை மரம் 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

erode east by election councout tree fire incident 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

 

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக தொண்டர்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக அங்கு வைக்கப்பட்ட பட்டாசு ஒன்று அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது விழுந்தால் தென்னை மரமானது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்