Erode Dt gopichettipalayam TN Palayam near stone Quarry Incident 

Advertisment

கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் எதிர்பாராத விதமாக இன்று (20.08.2024) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ள பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் கல்குவாரியின் உரிமையாளரான ஈஸ்வரி, அவரது கணவர் லோகநாதன், மற்ற தொழிலாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த வெளியூரைச் சேர்ந்த இருவர் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.