உலக வரைபடம் முழுக்க பேசும் பொருள் மட்டுமல்ல, மரண அச்சத்தை ஒரு மூன்றே மாதத்தில் ஏற்படுத்தி கொடூரனாக வலம் கரோனா வைரஸ் தொற்று இந்த பூமியில் உள்ள 163 நாடுகளில் தனது கொடூர கால் தடத்தை பதித்துள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளராத நாடுகள் என யாரையும் இந்த கரோனா அரக்கன் விடவில்லை.

Advertisment

இந்தியாவில் மிக கடுமையான முன் எச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை ஆளும் அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்தப்பட்டாலும் வைரஸை விட வேகமாக வதந்திகள் பரவுகிறது. இதனை கேட்கும் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

erode district superintendent of police

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகனேசன் ஐ.பி.எஸ்., கரோனா வைரஸ் தொற்று பற்றி தவறான தகவல்களை வதந்தியாக பரப்பிய நான்கு பேரை ஏற்கனவே கைது செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கு முன்பு போல இல்லை. இப்போதெல்லாம் யார் எதை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடங்களில் பதிவிட்டாலும் அது உடனே வைரஸை விட வைரலாகி பரவுகிறது. அப்படிப்பட்ட தகவல் உண்மை என மக்கள் நம்பிவிடுகிறார்கள்.

கரோனா வைரஸ் பற்றி விழிப்புனர்வை ஏற்படுத்தாமல் அது பற்றி மேலும் மக்களிடம் பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தவே சிலர் இந்த சமூக ஊடகங்கள் மூலம் பொய் வதந்திகளை பரப்புகின்றனர். இது சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் குற்றச் செயல். ஆகவே அது போன்று வீண் வதந்திகளை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்வது மட்டுமல்ல அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisment

உண்மைகளைவிட வீண் வதந்திகள் அப்பாவி மக்களை பதட்டப்பட வைப்பது என்பது உண்மைதான்.