/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/652_21.jpg)
தமிழகம் முழுக்க 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் பல மாவட்ட எஸ்பிமாற்றப்பட்டார்கள். இதேபோல் ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட எஸ்பி ஆக இருந்த தங்கதுரை ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அவரவர்களுக்கு பணிமாறுதல் செய்த இடங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக தங்கதுரை இன்று மதியம் 2 மணிக்கு பொறுப்பேற்றார். அதேபோல் நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக ஆக சக்தி கணேசன் பொறுப்பேற்றார். தொடர்ந்து தமிழகம் முழுக்க ஐபிஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில்பொறுப்பேற்று கொண்டார்கள்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)