Advertisment

ஆடைகளற்ற நிலையில் பெண் சடலம் மீட்பு; போலீசார் தீவிர விசாரணை!

erode district sathyamangalam police station front women incident

Advertisment

ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் நிலையம் முன்பாக உள்ள கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் ஒன்று ஆடைகள் இன்றி சடலமாகக்கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்குதகவல் கிடைத்தது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி ஆழ கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

மேலும் சடலமாகக் கிடந்த பெண்ணின் உடல் ஆடைகளற்ற நிலையில்கிடந்ததாலும், அதன் அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா என்பது குறித்தும் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

sathyamangalam VAO woman police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe